சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அங்கு பயிலும் மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
மேலும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.