அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் 6 இந்திய வம்சாவளிகள் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் இந்திய வம்சாளிகள் 6 பேர் எம்பிக்களாக பதவியேற்றனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.