அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல் ஆணையர் அருண், ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.