சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக மாணவரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா பல்கலைக்கழகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மாணவரணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.