கோவை அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தனியார் பள்ளி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோட்டை பிரிவு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பள்ளி வேன் மாணவர்களுடன் வீரபாண்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது வேன் ஓட்டுநர் அஜய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து சென்ற போலீசார், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான பேருந்தையும் கிரேன் மூலம் மீட்டனர்.