தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!
Jul 1, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 09:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

அதன்படி, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், கிண்டியில் உள்ள மற்றொரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கும் HMPV வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது என்றும், புதிதாக உருமாறிய தொற்று எதுவும் தற்போது பரவவில்லை கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவகால காய்ச்சலே மக்களுக்கு ஏற்படுவதால் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும், HMPV வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக பொது இடத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல், குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 7 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

Tags: HMPV virus infectionChennaichinasalemHMPV virus
ShareTweetSendShare
Previous Post

டிரம்புக்கு சிறைதண்டனை? : ஆபாச நடிகை வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு

Next Post

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

Related News

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.173 குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்த வேண்டும் – தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!

ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைப்பு – டிசம்பர் 31 வரை கட்டணம் கிடையாது என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவ சேவை சென்றுள்ளது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

நவாஸ்கனி மீதான வழக்கு; வருமான வரித்துறை உறுதி

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies