அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் 43 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பக்தர்களின் வசதிக்காக, அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.
அதன்படி, புதன் கிழமை மாலை 4.50-க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோம்தி நகர் சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் கும்ப சிறப்பு ரயில் இயக்கப்படுவது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.