பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!
Sep 11, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 10, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இரவு நேரத்தில் சென்னைக்கு திரும்புவோர், போதிய பேருந்துகள் இல்லாத பட்சத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

அப்படியான பயணம் சில நேரங்களில் மிகுந்த ஆபத்துமிக்க பயணமாக அமைந்துவிடுகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறவும் அப்பயணங்கள் பெரும் காரணங்களாக உள்ளன.

இரவு நேரங்களில் ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கத்தில் க்யூ ஆர் கோடு பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் பயணிகள், அசாதாரண சூழலை உணர்ந்தால், தங்களுடைய செல்போனில் அந்த க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து SOS பட்டனை அழுத்தினால், குறிப்பிட்ட வாகனத்தின் அனைத்து விவரங்களும் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பயணிக்கவே அச்சப்படும் சூழலில், சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் க்யூ ஆர் கோடு திட்டம் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் தொடங்கி, கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பொதுப்போக்குவரத்து என அனைத்துவிதமான இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த க்யூ ஆர் கோடு திட்டம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: QR கோடு ஒட்டும் திட்டம்CHENNAI NEWSwomen safetychennai news todayNew technology to protect women: QR code sticking project!
Share
Tweet
SendShare
Previous Post

லெப்டினன்ட் அதிகாரிகள் பதவியேற்பு : நாட்டின் பாதுகாப்பு அரண்!

Next Post

உக்ரைனை பாதுகாக்க அமைதிப்படை : பிரிட்டன் தலைமையில் அணிதிரண்ட ஐரோப்பா!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies