நீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
Oct 18, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேர்வர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆண் தேர்வர்கள், வெளிர் நிற அரைக்கை சட்டைகள், எளிமையான கால் சட்டைகள், மெல்லிய காலணிகளை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பெண் தேர்வர்கள் ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள் இல்லாமல்  எளிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள், சல்வார் அல்லது பேண்ட்டுகள், செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை, ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள், நகைகள், அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ்கள், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிந்து வர கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்குத் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நகல், வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை, பால்பாயிண்ட் பேனா எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள், பணப்பைகள், கைப்பைகள், சன் கிளாஸ்கள், அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டு சீட்டுகள், சாப்பிடக்கூடிய பொருட்களை எடுத்துவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: நீட் தேர்வு - வழிகாட்டுதல்கள் வெளியீடுஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுநீட் நுழைவுத்தேர்வு நாளைNEET Exam - Guidelines Released
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

Next Post

இந்திய ராணுவத்தால் அச்சம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாக்கும் பாகிஸ்தான்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies