ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி நாட்டிற்காகப் பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
தென் கொரியாவின் குமி பகுதியில் நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதங்களை வென்று, மொத்தமாக 24 பதக்கங்களுடன் 2-ம் இடம் பிடித்தது.
இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர், வீராங்கனைகளின் செயல்திறனை எண்ணி நாடு பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அவர்களின் உழைப்பும், உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்ததாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.