மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!
Oct 17, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 207 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், நீதிபதி ராஜலட்சுமி பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்று, கனவுகளுடன் வலம் வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை  ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்தது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளதை வெளிக்காட்டுவதாகத் தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Tags: annauniversity issueGnanasekaran used the word 'sir' to threaten a student: Judge mentions in the verdict
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

Next Post

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies