ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம்-4 என்ற திட்டத்தின்கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் அமெரிக்கா, போலாந்தைச் சேர்ந்த 3 பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் 4 வீரர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக 4வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 11ஆம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு 4 வீரர்கள் மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

Tags: Axiom-4 missionAmerican space agencyIndian Air Force pilot Subhanshu ShuklaNASAIndian Space Research OrganizationInternational Space Stationtechnical glitch.
Share
Tweet
SendShare
Previous Post

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

Next Post

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies