உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் அவசியம் குறித்து விளக்குவதற்கும் தமிழக வனத்துறை இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியுள்ளது. பாம்புகள் அதிகளவு உள்ள மாநிலங்களில் முதன்மையாக மாநிலமாகத் திகழும் தமிழகத்தில் பாம்புகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியக் கலாச்சாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் உயிரினங்களில் ஒன்று பாம்பு. இந்தியாவில் நாக வழிபாடு என்பது பல பண்பாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இத்தகைய பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு பாம்புகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற  விழாவில் பாம்பு மீட்பாளர்களுக்கான செயல்திறன் பயிற்சியும் வழங்கப்பட்டது.

நாட்டிலேயே அதிக பல்லுயிர் தன்மை கொண்ட மாநிலங்களில் முதன்மையானதாக மட்டுமின்றி அதிக பாம்பு வகைகளைக் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. நகரவாசிகளுக்குப் பாம்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், அவை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாலும் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது.

பாம்புக் கடி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததன் விளைவே இந்தியாவில் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார் பாம்புகள் குறித்து நீண்ட ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவரும் சாந்தகுமார்.

பாம்பு கடித்துவிட்டால் பதட்டப்படுவதும், இறுக்கி கயிறுகளால் கட்டுவதும் தவறான நடைமுறை எனப் பாம்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திரைப்படங்களைப் பார்த்து பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து ரத்தத்தை உறிவது போன்ற தவறான முறையைக் கையாள்வதே கை, கால்களை இழக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிவரும் காலங்களில் பாம்புகளுடன் மனிதர்களும் சேர்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நண்பனாகச் செயல்படும் பாம்புகளின் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: World Snake Day: Snake bite deaths on the rise due to lack of awarenessஅதிகரிக்கும் பாம்பு கடி பலிஉலக பாம்புகள் தினம்today உலக பாம்புகள் தினம்
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Next Post

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies