IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!
Sep 2, 2026, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

IRON DOME கூட தடுக்காது : இந்தியாவின் நவீன ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணை!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஷ்ணு திட்டத்தின் கீழ் 1,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.  இந்த வெற்றி, இந்திய -பசிபிக் மண்டலத்தில், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதில் இந்தியாவின் மைல்கல்லாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ப்ராஜெக்ட் விஷ்ணு என்பது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டமாகும். இது ஒரு ரகசியத் திட்டமாகும். இந்த திட்டம் – ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் எதிர்ப்பு பாதுகாப்பு தளங்கள் உட்பட பன்னிரண்டு வகையான ஏவுகணைகளை உருவாக்க பணிசெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ET-LDHCM ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இது  அனைத்து இந்திய ஏவுகணை அமைப்புகளையும் விட பன்மடங்கு வேகமும் திறனும் உடையதாகும். இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சுமார் 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

ஒலியின் வேகத்தை விட எட்டு மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.  உயரத்தைப் பொறுத்து மணிக்கு சுமார் 10,000 முதல் 11,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை விடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   2,000 கிலோ வரை எடையுள்ள  வெடி பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும்  அணு ஆயுதங்களையும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

பாரம்பரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மாறாக, ET-LDHCM ஏவுகணை மிகக் குறைந்த  உயரத்தில் பறக்கும்.  மேலும் இதன் மேம்பட்ட சூழ்ச்சித்திறன், அதன் பறக்கும் பாதையை நடுவில் மாற்ற அனுமதிக்கிறது.

மேம்பட்ட வெப்ப-எதிர்ப்பு பொருட்கள் மற்றும் வெப்பத் தடுப்பு பூச்சுகளால் கட்டமைக்கப்பட்ட இந்த ஏவுகணை 2,000°C வரை வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டது. பாதுகாப்பு வட்டாரங்களில் தகவலின் படி, இந்த ஏவுகணையின் வேகம் மற்றும் தப்பிக்கும் சூழ்ச்சித் திறனால், தற்போது உலகில் உள்ள IRON DOME, S-400 & Patriot போன்ற வான்பாதுகாப்பு அமைப்புகளாலும்  இந்த ஏவுகணையை இடைமறிக்க முடியாது.

ET-LDHCM ஏவுகணையின்  மையத்தில் ஒரு ஸ்க்ராம்ஜெட் என்ற  சூப்பர்சோனிக் எரிப்பு ராம்ஜெட் இன்ஜின் உள்ளது. இது உந்துவிசை தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகும். இது ஏவுகணை எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீண்ட தூரங்களுக்கு ஹைப்பர்சோனிக் வேகத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது.

மேலும்,இது எரிபொருள் எரிப்பு, வளி மண்டல ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. இது நீண்ட நேரத்துக்கு,ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் வேகத்தைக் கடைப்பிடிக்கிறது. நெகிழ்வுத் தன்மையே இந்த ஏவுகணையின் சிறப்பம்சமாகும். இது நிலத்தில் உள்ள ஏவுதளங்கள்,   கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து செலுத்த முடியும். இது முப்படைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.

இந்த  Hypersonic glide vehicles  2027, 2028ம் ஆண்டுக்குள் இந்திய ஆயுதக் களஞ்சியத்தில் சேரக்கூடும் என்றும்,    2030 ம் ஆண்டுக்குள் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை, தெற்காசிய இராணுவ களத்தில் ஒரு GAME CHANGER ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா நாளைய போர்க்களத்தில் களமிறங்கியுள்ளது. ஆயுத களஞ்சியத்தில் அதிநவீன ஏவுகணை இருப்பதே உலக நாடுகளுக்கு ஒரு செய்தி தான்.

இனி அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் இந்தியா பதில் சொல்லப் போவதில்லை. அடுத்து வருவதற்குத்  தயாராகவே  உள்ளது என்பது தான் அந்த செய்தி.

Tags: Even IRON DOME won't stop it: India's modern hypersonic ET-LDHCM missileஹைப்பர்சோனிக்ஹைப்பர்சோனிக் ET-LDHCM ஏவுகணைIRON DOME கூட தடுக்காது
Share
Tweet
SendShare
Previous Post

கடைமடைக்கு வராத தண்ணீர் : கெலவரப்பள்ளி விவசாயிகள் புகார்!

Next Post

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

Related News

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies