சினிமாவை விஞ்சிய கொலை - 10 ஆண்டு ரிவென்ஞ்ச் - பழிதீர்த்த இளைஞர்!
Sep 27, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 08:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாயை அவமானப்படுத்திய நபரை 10 ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்துப் பழிதீர்த்திருக்கிறார் இளைஞர் ஒருவர். சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவிலும் ரிவென்ஞ் திரைப்படங்களுக்குப் பஞ்சமில்லை. பாலிவுட் திரைப்படங்கள் போன்று 10 வயது சிறுவனின் கோபம், 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கொலையாக மாறியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தை அரங்கேற்றிய நபரின் பெயர்தான் சோனு காஷ்யப்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், சோனுவின் தாயாரை கடுமையாகத் தாக்கி அவமானப்படுத்திய மனோஜ் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறார். தனது தாய் தன் கண் முன்னால் தாக்கப்பட்ட அவமானத்தை சோனு காஷ்யப்பால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கோபத்தின் உச்சிக்கே சென்ற சோனு, மனோஜை பல ஆண்டுகளாகச் சல்லடை போட்டுத் தேடி வந்திருக்கிறார். 10 ஆண்டுகள் உருண்டோட, கடைசியாக 3 மாதத்திற்கு முன்பு முன்ஷி புலியா பகுதியில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த மனோஜை கண்டுபிடித்தார் சோனு.

கோபம் கொப்பளிக்க, மனோஜைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார். மனோஜைப் பின்தொடர்ந்த சோனு, 4 கூட்டாளிகள் உதவியுடன் கதை முடிக்க முடிவு செய்தார்.

கடந்த மே 22ம் தேதி மனோஜ் வழக்கம்போல் தனது கடையை பூட்டி வீட்டுச் செல்ல, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சோனுவும், அவரது கூட்டாளிகளும் மறைந்திருந்தனர். தனியாக வந்த மனோஜை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிய அவர்கள், ரத்த வெள்ளத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மனோஜ் உயிரிழந்தார்.

கொலை திட்டம் நிறைவேறினால் மது விருந்து வைப்பதாக உறுதியளித்தபடி, நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளார் சோனு. இதனிடையே கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். எனினும் கொலையாளிகளை நெருங்க முடியவில்லை.

அண்மையில் சோனுவும், அவனது கூட்டாளியும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் கொலையாளிகளில் ஒருவர் அணிந்திருந்த டீ-சர்ட்டும், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நபரின் டீசர்ட்டும் ஒத்துப்போக, 5 பேரையும் பொரி வைத்துப் பிடித்தது போலீஸ்.

10 ஆண்டுக்கால ரிவென்ஞ்ச், கொலையில் நிறுத்திய சம்பவம் ஒருபக்கம் பேசப்பட்டாலும், சில நிமிட சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளைக் கண்டறிய பேரூதவி செய்யும் என்பதை சோனுவின் சம்பவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

Tags: A murder that surpasses cinema - 10 years of revenge - a young man who avenged himself!சினிமாவையே விஞ்சிய கொலைபழிதீர்த்த இளைஞர்கொலை சம்பவம்
Share
Tweet
SendShare
Previous Post

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies