கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!
Sep 27, 2026, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் நிதியை வழங்க மறுக்கும் தமிழக அரசால் ஆதரவின்றி தவிக்கும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கொரோனா தொற்று பரவல் உச்சத்திலிருந்த நிலையிலும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக பணியாற்றி மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கொரானா தொற்றிலிருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பறிகொடுத்தனர்.

அத்தகைய மருத்துவர்களின் ஒருவராக, முன் களப்பணியாளராகத் தன்னை முன்னிறுத்தி தன் உயிரையும் துறந்த மருத்துவர் விவேகானந்தனுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவித உதவியையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்த தமிழக அரசு, மருத்துவர் விவேகானந்தன் இறந்த பிறகு, அவருக்கான நிதியைக் கூட வழங்காமல் ஏமாற்றி வருவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்தபடி 50 லட்ச ரூபாய் நிதி வழங்கிய நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் மாநில அரசு நிதி உதவி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி பலமுறை போராடியும் அரசும், சுகாதாரத்துறையும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னுயிரை நீத்த மருத்துவர் விவேகானந்தனுக்கு நிதியுதவியோடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு என்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: கொரோனா பணியில் உயிரிழப்புTamil Naducoronaமருத்துவர்Death due to Corona work: Tamil Nadu government abandoned the doctor's family
Share
Tweet
SendShare
Previous Post

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Next Post

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies