ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் மற்றும் வாராகி ஆகியோர் பொதுநல மனுக்கள் செய்துள்ளனர்.
அதில், குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் வழங்கிய பென் டிரைவ் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண முடியவில்லை எனக்கூறி வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும்,
அறிக்கையை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், விசாரணைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















