IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச நாணய நிதியமான IMF-மிடமிருந்து  8,560 கோடி ரூபாய் கடன் பெற்ற பாகிஸ்தான், ஒப்புக்கொண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாரதத்தை இரண்டாகப் பிரித்து,இஸ்லாமிய நாடாக உருவான பாகிஸ்தான், 1958ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைக் கடனாகப் பெற்றுள்ளது. IMF என்ற சர்வதேச நாணய நிதியத்துக்குக் கடன் கேட்டுச் செல்வது என்பது ICU-என்ற தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதாகும்.

ஒரு நோயாளி 25 முறை ICU-வுக்குச் சென்றால், அவன் பிழைப்பதற்கான சாத்திய கூறு மிகக் குறைவு என்பது உண்மை. சொல்லப்போனால் ஒரு ஜனநாயக கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தானில் மக்கள் பிரச்சனைகளும்  பொருளாதார சவால்களும்  அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடந்த நேரத்தில், இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி, சர்வதேச நாணய நிதியம் IMF, பாகிஸ்தானுக்குக் கடந்த மே மாதம் கடன் வழங்கியது. சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் பாகிஸ்தானின்  மோசமான கடந்த கால வரலாற்றைக்  கருத்தில் கொண்டு, இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியை, பாகிஸ்தான் அரசு, எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மடைமாற்றம் செய்யப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தானுக்குக் கடன் கொடுக்கும் போதே,ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன்,கூடுதலாக 11 நிபந்தனைகளை IMF விதித்திருந்தது. அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதி அளித்து கடன் பெற்ற பாகிஸ்தான் மூன்று நிபந்தனைகளைக் கூட நிறைவேற்ற வில்லை.

அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, பாகிஸ்தானால்  1.2 டிரில்லியன்  அளவுக்குச் சேமிக்க முடியவில்லை. மேலும், மத்திய வருவாய் வாரியத்தால் (FBR) மொத்த வருவாய் இலக்கான 12.3 டிரில்லியனையும் அடைய முடியவில்லை. சில்லறை வணிகர்களிடமிருந்து வரி வசூலிக்கத் தொடங்கப்பட்ட ‘தாஜிர் தோஸ்த் திட்டத்தின்’ கீழ் 50 பில்லியன் இலக்கையும் பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை.

பாகிஸ்தான் தனது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து அடுத்த பொருளாதார நெருக்கடிக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: சர்வதேச நாணய நிதியமான IMF-pakistan news todayPakistan cheated the IMF: Struggling to meet loan conditionsIMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான்கடன் நிபந்தனை
Share
Tweet
SendShare
Previous Post

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Next Post

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies