மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!
Oct 9, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் இந்த இரட்டையர்களின்றி எந்த மாராத்தான் ஓட்டப்பந்தயமும் நடைபெறாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விதமான ஓட்டப்பந்தயங்களிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர் சிவகங்கையைச் சேர்ந்த இரட்டையர்கள். சாதிக்கப் பிறந்த இரட்டையர்கள் குறித்தும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அவர்களின் பெற்றோர்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வரும் ராஜேஷ் – ராமாமிர்தம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள் தான் இந்த பிரனேஷ் மற்றும் பிரதீஷ். சிறு வயதிலிருந்தே ஓட்டப்பந்தயம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இரட்டையர்களுக்கு அவர்களது பெற்றோர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். முதன்முதலாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடத் தொடங்கிய 7 வயதான இரட்டையர்கள், பின்னாளில் எங்கு மாரத்தான் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வருகின்றனர்.

இதுவரை 64 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றிருக்கும் இந்த இரட்டையர்களின் அடுத்த மாரத்தான் இலக்கு 40 கிலோமீட்டர் தூரமாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாள்தோறும் அறுபது கிலோ மீட்டர் என சென்னை வள்ளுவர்கோட்டம் வரையிலான 707 கிலோ மீட்டர் தூரத்தை 12 தினங்களில் கடந்து சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இந்த இரட்டையர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1500 பல்டிகள் அடித்துக் கொண்டே செல்வதற்கான பயிற்சியில் இரட்டையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாராத்தான் மட்டுமின்றி யோகாசனம் செய்வதிலும் இரட்டையர்கள் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.

இரட்டையர்களின் முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும், வெற்றிக்கும் பின்னணியில் அவர்களது பெற்றோர்களின் அளப்பரிய பங்களிப்பு இன்றியமையாததாகத் திகழ்கிறது. மூன்று வயதில் ஓடத் தொடங்கிய இரட்டையர்களின் பயணம் ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற இலக்கை அடையும் வரை ஓயாமல் பயணிக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

Tags: மாரத்தானில் அசத்தல்சாதிக்கும் இரட்டையர்கள்tn sportssportsசிவகங்கை மாவட்டம்காரைக்குடிAmazing marathon: Twins who achieve by accumulating medals
ShareTweetSendShare
Previous Post

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Next Post

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies