40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!
Sep 12, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?… அத்தகைய உயரத்தில் தான்  பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க நாடாக இந்தியா வலம் வர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது விண்வெளித்துறையில் நாம் படைத்திருக்கும் சாதனை. வல்லரசு நாடுகள் கூட படைக்க முடியாகச் சாதனையை எல்லாம் இந்தியா சர்வசாதாரணமாக படைத்திருக்கிறது.

ராக்கெட் ஏவுவதில் கூட சில நாடுகள் தோல்வி காணும் நிலையில், அதனையெல்லாம் சாதாரணமாக கடந்து நிலவு வரை இந்தியா கால் பதித்துள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் திறனை அறிந்த சர்வதேச நாடுகள், அவர்களுடைய செயற்கைக்கோள்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அளவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இந்தியா கைவசம் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அசாத்திய திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 35 கிலோ எடையுள்ள செயற்கைகோள் மட்டுமே புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அது படிபடியாக உயர்ந்து 75 ஆயிரம் கிலோவாக  மாற உள்ளது.

ஆம் அதற்குத் தான், 40 அடுக்குமாடி குடியிருப்பு உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட்டை தயாரிக்கும் பணியல் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி.நாராயணன்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தகவல் தொடர்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்புக்காக மொத்தம்  55 செயற்கைகோள்கள் விண்வெளியில் வலம் வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக உயரும் எனத் தெரிவித்துள்ளது.

75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பிரமாண்ட ராக்கெட் தயாரிக்கும் திட்டம் வெற்றி பெற்று விட்டால், விண்வெளி துறையின் ராஜாவாக இந்தியா வலம் வருவதில் சந்தேகமில்லை என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

Tags: isro news todayRocket 40 stories high: India is now the king in spaceவிண்வெளியில் இந்தியா தான் ராஜா40 மாடி உயரத்தில் ராக்கெட்ISROIndiarocketNEWS TODAY
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Next Post

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies