டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!
Sep 12, 2026, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இதுவரை ராணுவம் மட்டும் பயன்படுத்திவந்த சாட்டிலைட் போன்கள், பொதுமக்கள் கைகளிலும் தவழ  போகிறது…டவர் இன்றித் தவிக்கும் பயனாளர்கள் எங்கிருந்தாலும் இனி எளிதாகத் தடையின்றி பேசலாம்… அப்படியொரு சேட்டிலைட் போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது பிஎஸ்என்எல்…. அது என்ன? பார்க்கலாம் விரிவாக..

இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் BSNL IsatPhone 2 SATELLITE போன்கள், தொலைதூர, அணுக முடியாத பகுதிகளில் நம்பகமான தகவல் பரிமாற்றத்தை வழங்குகின்றன. கரடுமுரடான செங்குத்தான மலைப்பகுதிகள், அனல் தெறிக்கும் பாலைவனங்கள், ஆகாயத்தை எல்லையாகக் கொண்ட பெருங்கடல்கள் போன்ற அணுக முடியாத பகுதிகளில், துல்லியமாகத் தகவல் தொடர்பை வழங்கக் கூடிய வகையில், BSNL IsatPhone 2 SATELLITE போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

BSNL நிறுவனம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ள IsatPhone 2 போன்கள் செயற்கைக்கோள் உதவியுடன் தகவல் தொடர்பை வழங்குகின்றன. 90 ஆயிரம் ரூபாய் விலைக் கொண்ட இந்தப் போன்கள், ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படைகள், பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் போன்றோர்ச் சவாலான சூழ்நிலைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பைப் பெற்றவை..

IsatPhone 2 போன்கள் மூலம், network coverage இல்லாத இடங்களில் கூட அழைப்புகளையும், அவசரகால செய்திகளையும் அனுப்ப முடியும்… இணையதளச் சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். நீடித்த உழைப்பு, நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரிகள், நீர்ப்புகா தன்மை, கீழே விழுந்தாலும் உடையாத அம்சங்களை IsatPhone 2 கொண்டுள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டியவர்களுக்கு, BSNL SATELLITE ஃபோன்கள் செலவு குறைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்குகின்றன. நியாயமான விலை மற்றும் நிலையான நெட்வொர்க் கவரேஜ் மூலம் பயனர்கள் தங்கள் தகவல் தொடர்பு செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.

தனியார்  பயனர்களுக்கான மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ஐந்தாயிரத்து 600 ரூபாயாகவும், ஆண்டு ரீசார்ஜ் திட்டம் 61 ஆயிரத்து 600 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பயனர்களுக்கு, மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் மாதத்திற்கு மூவாயிரத்து 360 ரூபாயாகவம், ஆண்டு ரீசார்ஜ் திட்டம் 36 ஆயிரத்து 960 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிய எந்தவொரு பயன்பாட்டிற்கும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 18 ரூபாயும், SMS ஒன்றுக்கு 18 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

தொடக்கத்தில் அரசு பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட IsatPhone 2 – போன்களை இனி பொதுமக்கள் விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ள முடியும். பிஎஸ்என்எல் அல்லது பிஎஸ்என்எல்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மூலம் IsatPhone 2 போன்களை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இயற்கை  பேரழிவுகள், விபத்துக்கள் அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் IsatPhone 2 SATELLITE மூலம், மக்கள் விரைவாக அதிகாரிகளை எச்சரிக்கவும், தேவைப்படும் நேரங்களில் உதவி பெறவும் முடியும். மொபைல் நெட்வொர்க்குகள் கிடைக்காத பகுதிகளில், நம்பகமான தகவல் தொடர்பை உறுதி செய்யும் IsatPhone 2, அவசரநிலை மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புக்குப் புதிய அனுபவத்தை வழங்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Tags: BSNL-ன் சேட்டிலைட் போன்BSNL PHONEBSNLNo tower? NO PROBLEM! : BSNL's satellite phone has arrived!
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

Next Post

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம் பெண்களை தொழில் முனைவோராக்கிய பாஜகவினர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies