சிறு, குறு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு : கோவையில் சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் ராணுவ தளவாட கண்காட்சி - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு : கோவையில் சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் ராணுவ தளவாட கண்காட்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுத் இந்தியன் பாதுகாப்புத்துறை சப்ளையர்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் அசோசியேஷன் சார்பில் ராணுவத் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கான கண்காட்சி கோவையில் தொடங்கியது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்ட தற்சார்பு இந்தியா திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு வலுவூட்டும் விதமாக, தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் சங்கம் சார்பில் கோவை ரத்தனம் கிராண்ட் ஹாலில் மூன்று நாள் கண்காட்சி துவங்கியது…

பாதுகாப்புத்துறை சார்ந்து அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சார்பில் 100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. முப்படைகளுக்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு தளவாடங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்கள்,HAL, பாரத் எர்த்மூவர்ஸ், தனியார் மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. இந்நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உபகரணங்களுக்கான ஆர்டர்களைப் பெறுவது, டெண்டரில் பங்கேற்பது, ஜெம் போர்டல் பதிவு, சான்றிதழ்களைப் பெறுவது, தரம் என அனைத்து வகையான உதவிகளையும் ஸ்டால்களிலேயே வழங்குகின்றன.

இந்திய பாதுகாப்புத்துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையில் இதுபோன்ற கண்காட்சி, அதிநவீன உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களை ராணுவத்தில் இணைக்கவும், பலப்படுத்தவும் உதவும் என்கிறார் முன்னாள் ராணுவ வீரரும் மேஜருமான மதன்குமார்.

உலகம் முழுவதும் ட்ரோன் தாக்குதல் யுக்தி பிரபலமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய பாய்ச்சலில் முன்னேறி வருகின்றன. 26 வயதான ஆதர்ஸ் என்பவர் தனது ட்ரோன் நிறுவனம் குறித்து பேசியதோடு, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் இன்னும் பல நிறுவனங்கள் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்கிறார்….

ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றாக கோவையை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த கண்காட்சி கோவையில் நடைபெறுவது மிகவும் பொருத்தமாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

“தற்சார்பு இந்தியா” திட்டம், உள்நாட்டு உற்பத்தி, உள்ளூர் வணிகங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை தொழில் நிறுவனங்கள் எளிதாக அணுக இது போன்ற கண்காட்சி பெரிய அளவில் உதவும் என்கின்றனர் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள்…

Tags: defence expoSelf-reliant India schemecoimbatoreexhibition for small and medium enterprisesDefense Suppliers and Startup Association
Share
Tweet
SendShare
Previous Post

வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Next Post

அதிகரித்த கடல் உணவு ஏற்றுமதி : அமெரிக்காவின் வரியை மீறி எழுந்த இந்தியா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies