சிட்னி துப்பாக்கிச்சூடு : நூலிழையில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்!
Sep 14, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிட்னி துப்பாக்கிச்சூடு : நூலிழையில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் சிட்னி போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். எப்படித் தப்பித்தார் என்பது பற்றிச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சிட்னியில் போண்டி கடற்கரை அருகே உள்ள சிறிய பூங்காவில் ஹனுக்கா யூதப் பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட யூத மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி கொண்டிருந்தனர் .

தீடீரென வந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர்ப் படுகாயமடைந்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் தலைதெறிக்க ஓடும் காட்சிகளும் மற்றும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ஒரு பயங்கரவாதி காவல்துறையினர் சுட்டதில் கொல்லப்பட்டார். படுகாயத்துடன் பிடிபட்ட இரண்டாவது பயங்கரவாதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பரபரப்பான திகிலூட்டும் சூழலிலும், தனது உயிரைப் பணயம் வைத்து துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை மடக்கிப் பிடித்துள்ளார் பழவியாபாரியான அகமது.

இந்தத் தாக்குதலின் போது அகமதுவுக்கும் இரண்டு இடங்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது. அகமது ஒரு உண்மையான ஹீரோ என்று பாராட்டைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில், பயங்கரவாத தாக்குதலின் போது அருகிலுள்ள ஒரு உணவகத்தில் இருந்ததாகவும், அறைக்குள் ஒளிந்து கொண்டு தாக்குதலிலிருந்து தப்பித்ததாகவும் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இந்தப் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய வாகன், பயங்கரவாதியை மடக்கிப் பிடித்த அகமது அல் அகமதுவின் வீரத்தைப் பாராட்டியுள்ளார். தாம் உட்பட பெரும்பாலான மக்களால் செய்ய முடியாத காரியத்தை அகமது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓடிச் சென்று, துப்பாக்கியால் சுடும் பயங்கரவாதியின் முதுகில் குதித்து ஏறி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளிய பிறகும், பயங்கரவாதியைச் சுடாமல், துப்பாக்கியைக் கீழே வைத்த அகமது பாராட்டுக்கு உரியவர் என்றும் கூறியுள்ளார்.

ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதை உணர்வதற்கு முன்பு, முதலில் அது ஒரு சுறா தாக்குதல் என்று நினைத்ததாகவும் மைக்கேல் வாகன் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, சிட்னியில் போண்டி கடற்கரைக்கு அருகே கிழக்கு புறநகர்ப் பகுதியான வேவர்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் (Pat Cummins) பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள யூத மக்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

போண்டி கடற்கரைப் பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், போண்டி மக்களுக்கும், யூத மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் இன்ஸ்டா பக்கத்தில் பாட் கம்மின்ஸ் பதிவிட்டுள்ளார்.

Tags: australia gun shotSydney shooting: Cricketer Michael Vaughan narrowly escapes death
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல ஹாலிவுட் இயக்குநர், மனைவி கொடூர கொலை – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் பதிவு!

Next Post

1971-ம் ஆண்டு பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ ஆக மாறிய வரலாறு என்ன…?

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies