கொழுந்துவிட்டு எரியும் வன்முறை : தீக்கிரையான வங்க தேசம் - இந்திய தூதரகம் முற்றுகை!
Nov 22, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொழுந்துவிட்டு எரியும் வன்முறை : தீக்கிரையான வங்க தேசம் – இந்திய தூதரகம் முற்றுகை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராகக் கடந்த ஆண்டு மிகப் பெரிய மாணவர் போராட்டம் நடந்தது. கட்டுக்கடங்காமல் போன போராட்டத்தின் விளைவாகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த ‘இன்குலாப் மஞ்சா’ (Inqilab Mancha) மாணவர் இயக்கத்தின் தலைவர் 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாடி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்துள்ள இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தார். வரும் பொது தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட போவதாகவும் அறிவித்திருந்தார்.

தேர்தல் தேதி அறிவித்த மறு நாள், டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியபோது முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ஹாடி சுடப்பட்டார். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சிங்கப்பூரில் அவசர மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஹாடி, கடந்த வியாழக் கிழமை மரணமடைந்தார்.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முக்கிய சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஹாடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய மாணவர்கள் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஹாடியைக் கொலை செய்த குற்றவாளிகள் இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாகக் கூறி, நள்ளிரவில் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ராஜ்ஷாஹி, குல்னா சிட்டகாங்கில் உள்ள இந்திய துணை தூதரகங்களை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்திக் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிப் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வங்கதேசத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரின் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், ஹாடியை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை ஒப்படைக்கும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மேலும் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் கட்சிக்குச் சொந்தமான சொத்துக்களையும் போராட்டக்காரர்கள் தாக்கி வருகின்றனர்.

அந்நாட்டின் முன்னணி நாளிதழ்களான (Prothom Alo) புரோதோம் அலோ மற்றும் (The Daily Star), கதி டெய்லி ஸ்டார் ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள் அந்தப் பத்திரிக்கை அலுவலகங்களுக்குத் தீவைத்துள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்துக்குள் சிக்கிய 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களையும் ஊழியர்களையும் தீயணைப் படை வீரர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த வன்முறைக் காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஹாடியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள வங்கதேச அரசியல் கட்சிகள் அனைத்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளன.

ஹாடியின் மரணம், தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு என்று தெரிவித்துள்ள வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பயம், பயங்கரவாதம் ரத்தக் களரியின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஹாடியின் மரண நாள் இனி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், ஆதாரமே இல்லாத நிலையில் இது தொடர்பாக இந்திய தூதரை அழைத்து வங்கதேச அரசு விளக்கம் கேட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர சிக்கலும் பிரச்னையும் உருவாகி உள்ளது. முன்னதாக ஹாதி சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், சதிகாரர்களின் நோக்கம் தேர்தலைத் திசைதிருப்புவதாகும் என்றும் முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார்.

Tags: Blazing violence: Bangladesh on fire - Indian embassy under siegeகொழுந்துவிட்டு எரியும் வன்முறைவங்க தேசம்இந்திய தூதரகம்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் – இருநாடுகள் இடையே புதிய பாதையில் வலுப்பெறும் உறவு!

Next Post

அமெரிக்காவின் அழுத்தத்தை குறைக்கும் ஓமன் ஒப்பந்தம் : புதிய திசையில் பயணிக்கவுள்ள இந்திய ஏற்றுமதி துறைகள்…!

Related News

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி; துண்டை சுழற்றி உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

கோவை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உத்தரவு – சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல்!

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies