அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா....?
Sep 11, 2026, 11:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி : கறிக்கோழி இறைச்சி இனி கனவில்தானா….?

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் மக்களின் முக்கிய ப்ரோட்டின் உணவான கோழி இறைச்சி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் அசைவ உணவு பிரியர்களின் மிக முக்கிய உணவாகக் கோழி இறைச்சி உள்ளது.‌ தமிழ்நாட்டில் மட்டும் தினசரி மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை ஆகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் கோழி இறைச்சியை பரவலாக உண்ணும் வழக்கம் இல்லாமல் இருந்த நிலையில், பண்ணை கறிக்கோழிகள் வரத் துவங்கிய பின்னர் சாதாரண பாமர மக்களும் எளிதில் அசைவ உணவு உண்ணும் நிலையை அடைந்தனர்.‌

விலை குறைவு, அதிக புரோட்டின் என எளிய மக்களின் விருப்ப உணவாகக் கோழி இறைச்சி உள்ளது. இந்நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏராளமான விவசாயிகள் கறிக்கோழி பண்ணை அமைத்துக் கூலிக்கு கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று 42 நாட்களுக்கு வளர்த்துக் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு, கோழிக்குஞ்சுகள் வெப்பநிலையைச் சம நிலையில் வைத்திருக்கத் தேவையான அடுப்புக்கரி மூட்டைகள் என அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்த நிலையில் ஆறு ரூபாய் 50 காசு மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் குமுறல் எழுந்துள்ளது.

கூலி உயர்த்தப்படாததோடு பல மடங்கு உயர்ந்துள்ள மூலப் பொருட்கள் விலையால் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பிராய்லர் கோழிகளுக்கு 20 ரூபாய், நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 25 ரூபாய் என கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 1ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

புதிய கோழிக்குஞ்சுகள் பெறப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கறிக்கோழி வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இன்றியமையாத அசைவ உணவை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு துறை, கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை விவசாயிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இல்லையேல் அறிவித்தபடி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் 1ம் தேதி தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: non vegNEWS TODAYtoday newsA shock for non-vegetarian lovers: Will chicken meat now only be a dream...?அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி
Share
Tweet
SendShare
Previous Post

சொத்து விவரங்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கெடு!

Next Post

நோயாளிகளை வஞ்சிப்பதாக புகார் : சித்த மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies