மேற்காசிய போர் நிலவரம் - சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!
Sep 27, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்காசிய போர் நிலவரம் – சவூதி அரேபிய இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 29, 2026, 06:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்காசிய போர் சூழல் குறித்து சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானிடையே நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மேலும், முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால், கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். அவரிடம் மேற்காசியாவில் நிலவி வரும் போர் சூழல் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பிராந்திய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு, சவூதி இளவரசரிடம் இந்தியா சார்பில் தனது கண்டனத்தை பதிவு செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், கப்பல் வழித்தடங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தேவை குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சவூதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் நலனுக்காக, அவர் அளித்து வரும் ஆதரவுக்கு சவூதி இளவரசரிடம் தான் நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iranprime minister modiWest Asia Conflictiran attack israelSaudi Arabia's Crown Prince Mohammed bin Salmanisrael iran attackiran attackiran attacks
Share
Tweet
SendShare
Previous Post

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

Next Post

பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் – அமித் ஷா உறுதி!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies