கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதிகளை அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது.
கோயில் உபரி நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. இதனை ஏற்று கோயில் நிதியை பயன்படுத்தி நடைபெற இருந்த கட்டுமான பணிகளுக்கான அரசாணைகளை ரத்து செய்வதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்ற உத்தரவு மற்றும் கோயில்களின் நிதிச்சுமை காரணமாக 245 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் 29 திருமண மண்பங்கள், 17 வணிக வளாகம் என 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதியைக் கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
















