மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடு, கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறினார். அனைவருக்கும் உரிய பங்களிப்புடன், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் போகட்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் நமக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்தார்.
















