அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!
Sep 15, 2026, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா- சவூதி அரேபியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இதுவரை, அணு ஆயுதம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு என்ற பெருமையாக சொல்லிவந்த பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைபடுத்தியுள்ளது. மேலும் மத்திய கிழக்கில் ஒரு புதிய அணுசக்தி முக்கோணத்தை உருவாக்கும் முதல்படியாக அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அணுசக்தி கொண்ட ஒரே இஸ்லாமியநாடு என்ற காரணத்தால் உலக அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கான ஒரே பாதுகாவலர் என்ற சுய பிம்பத்தில் பாகிஸ்தான் இருந்து வந்தது.

நீண்ட காலமாக அணுசக்தி நாடாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன் சவூதி அரேபியா இருந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு பாகிஸ்தானுடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, சவூதி அரேபியா அணுசக்தித் திறனைப் பெற பாகிஸ்தான் மறைமுகமாக உதவக் கூடும் என்று கூறப்பட்டது.

வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், ஈரான் அணுகுண்டு தயாரித்தால் சவூதி அரேபியாவும் உடனடியாக அணுகுண்டு தயாரிக்கும் என சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலில், அணுசக்திப் பாதுகாப்பை ஒரு அவசியமான காப்பீட்டுக் கொள்கையாக சவூதி அரேபியா கருதுகிறது என்பதைப் பட்டத்து இளவரசரின் அறிவிப்பு சுட்டிக் காட்டியது.

ஏற்கெனவே சீன அரசுக்குச் சொந்தமான சைனா நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன், 2023-ல் சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கான ஏலத்தில் விண்ணப்பித்திருந்தது.

எகிப்தில் அணுமின் நிலையத்தைக் கட்டிய ரஷ்யாவும், சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணு உலைகளைக் கட்டிய தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தப் பின்னணியில் மற்ற வல்லரசுகளுடன் சவூதி கை கோர்க்காமல், அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்கும் வகையில் அந்நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ஏற்ப்டுத்தியுள்ளார்.

செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சியை வெளிப்படையாகத் தவிர்த்த ஐக்கிய அரபு அமீரகத்துடனான “தங்கத் தர” ஒப்பந்தத்தைப் போலல்லாமல், சவூதியுடனான ஒப்பந்தம் வேறுபட்டதாக அமைந்துள்ளது.

அதாவது, சவூதி அரேபியாவில் “பிளாக் பாக்ஸ்” எனப்படும் ஒரு செறிவூட்டும் வசதியை உருவாக்கி, அந்தத் தொழில்நுட்பத்தின் மீதான பெயரளவிலான கட்டுப்பாட்டை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் , சர்வதேச அணுசக்தி முகமையின் சர்வதேச மேற்பார்வைக்கான “கூடுதல் நெறிமுறை” இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கூடுதலாக அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு, விரிவாக்கப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தை சவூதி அரேபியா ஏற்கவேண்டும் என்றும், இஸ்ரேலை ஒரு தனி சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அதிபர் ட்ரம்ப் வைத்துள்ளார்.

இது இஸ்ரேலுடன் அமைதி மற்றும் அமெரிக்கத் தலைமையின் கீழ் ஒரு வலுவான ஈரான் எதிர்ப்பு கூட்டணியை அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இன்னொருபுறம் அணு ஆயுதத் தடுப்புப் பணிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதை விட அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேலுடனான நல்லுறவுகளுக்கே சவூதி முன்னுரிமை காட்டத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் இன்னும் 10 ஆண்டுகளில் மத்திய கிழக்கில் சவூதி, இஸ்ரேல் ஈரான் என்ற மூன்று அணுசக்தி நாடுகள் இருக்கும்.

இது துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம்போன்ற நாடுகளை அணுசக்தி பாதுகாப்பைத் தேட வைக்கும். இந்த புதிய அணுசக்தி முக்கோணத்தில், பாகிஸ்தான் அதன் இருப்பால் அல்ல ஒப்பீட்டு இல்லாமையால் தனித்து விடப்படும். குறிப்பாக காலப்போக்கில், பாகிஸ்தான் தவிர்க்க முடியாத முஸ்லிம் அணுசக்தி நாடாகக் கருதப்படாமல், பல நாடுகளில் ஒரு நாடாக மட்டுமே மதிக்கப்படும்.

Tags: Pakistan isolatednuclear agreementUnited States Saudi Arabia dealnuclear capabilities.
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

அவதூறுகள் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது – பிரதமர் மோடி

Related News

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies