சமூகம் மற்றும் நாட்டின் நலன்களின் மீது அஅக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையத்தை திறந்துவைத்து பேசிய பிரதமர் மோடி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்வு-தாழ்வு இல்லாத நிலைமையை உருவாக்குவதுதான் மத்திய அரசின் இலக்கு என்றார்.
மருத்துவத்தையும் என்ஜீனியரிங்கையும் தாய்மொழியில் கற்பதற்பான வாய்ப்பை உருவாக்கியதால், கல்வித்துறையில் மொழி அடிப்படையில் பாரபட்சம் இல்லாத சூழல் நிலவுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
சமூகம் மற்றும் நாட்டின் நலன்களின் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் எனவும், தேசமே முதன்மை என்ற எண்ணத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
















