காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி - இந்தியா அபாராம்!
Sep 17, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 2, 2026, 07:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் சாக்ஷி, ப்ரீத்தி பவார், ஜாஸ்மின், பிரியா, அருந்ததி சவுத்ரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இவர்களுடன் சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் ஆகியோரும் தங்கம் வென்றனர். ஜடுமணி சிங், லவ்லினா போர்கோஹெய்ன் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர். ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவில் அங்குஷ் பங்கல் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்ற நிலையில், 90 கிலோ பிரிவில் நரேந்தர் பெர்வால் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதன்மூலம் இந்திய குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், தடகளத்தில் குல்வீர் சிங் வெண்கலம் வென்ற நிலையில், இந்தியா மொத்தம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கிடையே, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

இதனை பாராட்டிய முதலமைச்சர் விஜய், பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags: PriyaArundhati ChoudharySachin SiwachJasmineIndiaCommonwealth Games.SakshiPreeti Pawar
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Next Post

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies