பேச்சுவார்த்தைக்கு வா என அழைத்துவிட்டு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் கூறுவது தமிழக முதலமைச்சரை இழிவுப்படுத்தும் செயல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சையில் மேகதாது அணைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் கர்நாடகாவுக்கு ஏன் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
















