விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Aug 24, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பாரதப் பிரதமர் . மோடி  மற்றும் பாஜகவிற்கு எதிராக விகடன் குழுமம் தொடர்ந்து விஷத்தைக் கக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘விகடன் குழுமத்தின்’ இந்த வார ‘ஆனந்த விகடன்’ இதழில், பாரதப் பிரதமர்  உரையாற்றுவதைப் போன்றும், அவருக்கு முன்னால் இருக்கும் மக்கள்  மூளை இல்லாதவர்கள் என்பது போலவும் சித்தரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரம்’ என்ற போர்வையில் எதை வேண்டுமானாலும் வரையலாம் என்ற ஆணவம் ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே, கடந்த காலங்களில்  பாரதப் பிரதமர் அவர்களுக்குக் கைவிலங்கு இடப்பட்டது போன்ற ஒரு அருவருப்பான கார்ட்டூனை வெளியிட்ட ‘ஹாசிப் கான்’ என்ற அதே நபர், மீண்டும் இந்த கார்ட்டூனை வரைந்திருப்பதாகத் தெரிகிறது என கூறியுள்ளார்.

இது பாரதப் பிரதமர்  மோடி  மற்றும் பாஜக மீதான அவரின் உள்நோக்கத்துடன் கூடிய வன்மத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. அதற்கு விகடன் குழுமமும் ஆதரவளித்து உற்சாகப்படுத்துகிறது.

உண்மையில், இப்படி ஒரு கார்ட்டூனை வெளியிட்டவர்களுக்கு ‘மூளை’ இருக்கிறதா என்ற கேள்விதான் மக்கள் மத்தியில் எழுகிறது. ஆங்கிலத்தில் ‘Habitual Offender’ என்று அழைக்கும் வகையில், தொடர்ச்சியாக பாரதப் பிரதமரையும், பாஜகவையும் இழிவுபடுத்தி வரும் விகடன் குழுமம், இத்தகைய செயல்களை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அருவருப்பான கார்ட்டூனை வெளியிட்டதற்காக விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், சட்டப்படியும் ஜனநாயக முறைப்படியும் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: nainar nagendran press meetvikatan cartoonanantha vikatanbjptamilnadu bjp state presidentVikatannainar condemn
Share
Tweet
SendShare
Previous Post

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

Next Post

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

Related News

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

Load More

அண்மைச் செய்திகள்

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies