பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு - சிறப்பு தொகுப்பு!
Oct 8, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்கின் அடிப்படையில் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற நோக்கத்தில் உள்நாட்டு ஆயுத தளவாடங்களின் உற்பத்தியை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏவுகணை மற்றும் guided bombs என்ற வழிகாட்டப்பட்ட குண்டுகள் தயாரிக்கும் திட்டங்களில் உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கையை DRDO எடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

நீண்ட காலமாகவே பொதுத் துறை அரசு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்திய பாதுகாப்புத் துறையின் பல்வேறு பகுதிகளில், இப்போது உள்நாட்டுத் தனியார் துறையினரும் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

ஒருகாலத்தில் ஆயுத தளவாடங்களைப் பெருமளவில் இறக்குமதி செய்துவந்த இந்தியா, கடந்த 12 ஆண்டுகளில் ,பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஏவுகணை மற்றும் வழிகாட்டப்பட்ட குண்டுகளின் வடிவமைப்பு,தயாரிப்பு மற்றும் உற்பத்தியில் பங்கேற்க உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள DRDO-ன் Research Centre Imarat அழைப்பு விடுத்துள்ளது.

Missiles and Strategic Systems பிரிவின் கீழ் உள்ள திட்டங்களுக்காக, ‘உருவாக்கம் மற்றும் உற்பத்தி கூட்டாளிகள்’ என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களைக் கண்டறிந்து பட்டியலிட, விருப்பம் தெரிவித்தல் அறிவிப்பான EOI வெளியிடப்பட்டுள்ளது.

Agni, Prithvi, Akash மற்றும் Pinaka போன்ற உள்நாட்டு ஆயுதங்களின் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். இறுதிப் பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்கள், பின்னர் குறிப்பிட்ட திட்டங்களுக்கான ‘முன்மொழிவு கோரல்’ (RFP) நடைமுறைகளுக்குப் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டமைப்பின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் DRDO-வடிவமைத்த ஆயுதங்களை வெறும் உற்பத்தி மட்டும் செய்யாமல் அந்த ஆயுத அமைப்புகளின் உருவாக்கம், உதிரிப் பாகங்களை இணைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலும் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.

ஒருங்கிணைப்பு மற்றும் தகுதிச் சான்றளிப்பு (qualification) ஆகியவற்றிற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட இந்நிறுவனங்கள் DRDO user trials சோதனைகளை நிறைவு செய்த பிறகு, ஆயுதப் படைகள் வழங்கும் உற்பத்தி ஆணைகளை நிறைவேற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் DRDO-வால் அடையாளம் காணப்பட்ட விநியோகச் சங்கிலியுடன் இணைந்து செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப் பட்ட நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட DRDO ஆய்வகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஆயுதங்களின் பயன்பாட்டுக் காலத்தில் தேவைப்படும் மேம்படுத்தல்கள் (upgrades) மற்றும் ஒருங்கிணைந்த தளவாட ஆதரவு (integrated logistics support) ஆகியவற்றிற்கும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்கும்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் சிக்கலான அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் அனுபவம், பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் நிறுவப்பட்ட தர உத்தரவாதம் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் திட்டத்தைப் பொறுத்து, நிறுவனங்கள் 50 அல்லது 100-க்கும் மேற்பட்ட அலகுகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விரிவான நிதி, தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தேவைகளும் இந்த விருப்பம் தெரிவித்தல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை உள்ளடக்கியிருப்பதால், வெடிபொருட்களைக் கையாள்வதற்கான விரிவான தேவைகளையும் DRDO வகுத்துள்ளது.

பாதுகாப்புத் துறை சார்ந்த பொருட்களுக்கான செல்லுபடியாகும் தொழில் உரிமமும் விண்ணப்பதாரர்கள் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிடம் (PESO) இருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டயமாக்கப் பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆயுத ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பான முறையில் வெடிபொருட்களைக் கையாள்வதற்கு ஏற்ற உள்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். எந்தவொரு நேரத்திலும் TNT மற்றும் RDX உள்ளிட்ட குறைந்தது ஐந்து டன் வெடிபொருட்களைச் சேமித்து வைக்கும் திறன் கொண்ட வெடிபொருள் சேமிப்பு வசதியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்பத் திறன்கள், உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள், நிர்வாக அனுபவம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் DRDOவின் நிபுணர்கள் அடங்கிய குழு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் என்றும் இறுதிப் பட்டியலைத் தயாரிப்பதற்கு முன், பங்கேற்கும் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை அந்நிறுவனங்களின் வளாகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க DRDO எடுத்துள்ள நடவடிக்கை, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களை இந்த நடவடிக்கை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags: domestic production of weaponrymanufacture of missilesResearch Centre Imaratcentral governmentindian armydrdoAtmanirbhar Bharat
Share
Tweet
SendShare
Previous Post

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies