நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரும், நேபாள நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 63 பேரும் இதில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் இருந்து 149 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
சீனாவில் பாதுகாப்பாக உள்ள சுமார் 400 இந்தியர்களுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வெள்ள பாதிப்பில் சிக்கி சுமார் 320 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
















