பிரதமர் ஆசையில் ஜோசப் விஜய் பலியாகிவிடக் கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென்னிந்தியாவில் மிகப்பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டம் என தெரிவித்தார்.
ராகுலை விட பெரிய தலைவராக வர வேண்டும் என்பதும் விஜய்யின் ஆசை என்றும், இருவரில் வெல்லப்போவது யார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியை விட ஜோசப் விஜய் சிறப்பானவர் என்றும் அர்ஜுன் சம்பத் கூறினார்.
தமிழக அரசுக்கு எதிராக விசிக, கம்யூனிஸ்ட்கள் வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும், அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தடுக்கப்படுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















