இந்திய விமானப் படையின் மருத்துவம் அல்லாத பிரிவில், முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானப் படை தலைமையகத்தில், விமானப் படை துணைத் தலைமை அதிகாரியாக சக்தி ஷர்மா பதவியேற்றுக் கொண்டார். கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி விமானப் படையின் கல்விப் பிரிவில் சேவையைத் தொடங்கிய இவர், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கடந்த 30 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சக்தி ஷர்மா, வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய விமானப் படையின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















