சென்னை மக்கள் மாளிகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு கண்காட்சியை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், நவராத்திரி விழாவையொட்டி பிரமாண்ட கொலு கண்காட்சி தொடங்கியுள்ளது. தமிழர்களின் பாரம்பரியம், கலை மற்றும் ஆன்மிகப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை, ஆளுநர் சிறப்புப் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
இதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பொற்றாமரைக் குளம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் உள்ளிட்டவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், 18-ம் படி கருப்பண்ணசாமி திருவுருவம், ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் சிவன், பார்வதி, ராமர், சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவப் பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.
















