மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவும் சபாநாயகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும் தங்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ஆசி பெற்றனர்.
















