நடப்பு நிதியாண்டில், நாட்டின் தனியார் துறையின் மூலதனச் செலவினம் 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இது 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. மேலும், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தத் திட்டங்களின் மதிப்பீடு 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்திய நிறுவனங்களின் கடன் அளவு குறைந்து, நிதிநிலை வலுப்பெற்றுள்ளதாகவும், வங்கித் துறை பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
















