கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கூகுள் மேப்பை நம்பி குறுகலான பாதையில் சென்ற கார் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளத்தில் இருந்து குலசேகரம் நோக்கி சென்ற காரில் 4 பேர் பயணித்தனர். மேல்புறம் செம்மங்கலை பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய குறுகலான பாதையில் கார் சென்றபோது சிக்கிக்கொண்டது. பாதையில் சிக்கிய காரை முன்னும் பின்னும் நகர்த்த முடியாமல் சிக்கியதை அறிந்த பொதுமக்கள், காரை பாதுகாப்பாக மீட்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினரும் நிலைமையை ஆய்வு செய்தனர். ஆனால், காவல்துறையினர் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் 4 இளைஞர்களும் தப்பி சென்றனர். இளைஞர்கள் 4 பேரும் மதுபோதையில் இருந்ததாகத் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















