தவெக அரசின் ஆறு மாத ஆட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 45 நாட்களுக்கு முன்பு காவிரி நீர் திறக்கப்பட்டதால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு பத்தில் ஒரு பங்கு மகசூல் கூட கிடைக்காத நிலை உள்ளதாகவும், தவெக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என தெரிவித்தார்.
தீபாவளிக் காலத்தில் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நயினார் குறிப்பிட்டார்.
















