தீபாவளி கொண்டாட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அமைய வேண்டும் என்றும், பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் காரணங்கள் உள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற மகேஸ்வரி சமூகத்தின் தீபாவளி சமரோ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை என்றும், அவை பூச்சிகளை அழிக்க உதவின என்றும் குறிப்பிட்டார். நெய் மற்றும் எண்ணெய் விளக்குகளை ஏற்றுவது காற்றைத் தூய்மைப்படுத்தும் வழக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்தால் வாழ்வும் தூய்மையாக இருக்கும் என வலியுறுத்திய மோகன் பாகவத், தர்மம் சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், பெண்களுக்கு தர்மம் குறித்த புரிதல் ஆண்களைவிட ஆழமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
















