திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் கோயிலில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடம் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், கோயிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்கும் விதமாக வரும் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், கோவிலில் உள்ளே புரோக்கர்கள் பணம் வாங்கிக் கொண்டு பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரமேஷ் கூறினார்.
















