சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை : இந்தியாவும் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் : ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Nov 10, 2026, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை : இந்தியாவும் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் : ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவில் படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீவிர வேலைவாய்ப்பின்மை நெருக்கடி குறித்து பதிவிட்டுள்ள ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, எதிர்காலத்தில் இந்தியாவும் இதே போல் கடுமையான சிக்கலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகின் உற்பத்தி மையமாகவும், சுமார் 1.2 ட்ரில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருக்கும் சீனாவில் கூட, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட வேலை இல்லாதவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர் என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு. கல்வித் தகுதிகள் நிலையான பணி வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலையில் இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் சவால் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, சீனாவின் வேலைவாய்ப்புச் சூழல் ஒரு விசித்திரமான முரண்பாட்டைக் காட்டுவதாக கூறியுள்ளார்.

வலிமையான உற்பத்தித் துறையை உருவாக்கி, பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து, உலகளாவிய ஏற்றுமதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள போதிலும் அவையெல்லாம் சீனாவின் இளம் தலைமுறையினருக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள நவீன கல்வி அமைப்புகளும் பொருளாதாரக் கட்டமைப்புகளும், மாணவர்களை பெரும்பாலும் வழக்கமான வேலைவாய்ப்புகளுக்காகவே தயார்படுத்தி வருவதாகவும் இத்தகைய அமைப்புகளில், ஒரு பட்டப்படிப்பை முடித்த பிறகு, நிலையான மாத ஊதியம் கிடைக்கும் வேலை கிடைப்பதே வழக்கமான எதிர்பார்ப்பாக உள்ளதாகவும், ஆனால் இத்தகைய வழக்கமான கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஆட்டோமேஷன் மற்றும் AI தொழில்நுட்பங்களால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன என்று விளக்கியுள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தச் சிக்கல் சீனாவுக்கு மட்டும் உரியதல்ல என்றும் கூறியுள்ளார்.

AI தொழில்நுட்ப வளர்ச்சியால், முன்பு 10 பேர் செய்ய வேண்டிய வேலையைத் தற்போது திறமையான ஒரே ஒரு நபரால் செய்ய முடிகிறது என்றும், இதனால் பாரம்பரிய வேலைவாய்ப்புகள் இனி வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்த வேகத்தில் வளராது என்றும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக் காட்டியுள்ளார்.

முறையான கல்வித் தகுதிகளுடன், நடைமுறை வணிகத் திறன்கள், வாய்ப்புகளைக் கண்டறியும் திறன் மற்றும் தொழில்முனைவோருக்கான மனநிலை ஆகியவை வரும் காலங்களில் மிக முக்கியமானவையாக மாறக்கூடும் என்பதால் மக்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவும், சுதந்திரமாகச் செயல்படவும், தமக்கான வருமான ஆதாரங்களை உருவாக்கிக்கொள்ளவும் அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை, தனிப்பட்ட வணிகங்களும் தொழில்முனைவு முயற்சிகளுமே செல்வத்தை உருவாக்குவதிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றியுதையும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக் காட்டியுள்ளார்.

இளைஞர்கள் வெறும் மாதச் சம்பள வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல், சுயதொழில் செய்யும் பாதையில் செல்ல தயாராக வேண்டும் என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஒரு முழு தலைமுறையினரையும், தங்களுக்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் வகையில் தயார்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Sridhar VembuZOHO founderchina unemployment crisisindia unemployment crisistrade surplusuniversity graduates.unemployed population
Share
Tweet
SendShare
Previous Post

ஊரக வளர்ச்சித் துறை வங்கி கணக்குகளில் ரூ. 22 கோடி மோசடி – போலீஸ் விசாரணை!

Related News

ஊரக வளர்ச்சித் துறை வங்கி கணக்குகளில் ரூ. 22 கோடி மோசடி – போலீஸ் விசாரணை!

தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா – புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்க்ள்!

48 மணி நேரத்திற்கு மேலாக காவலில் இருந்தால் அரசு ஊழியர் தற்காலிகப் பணியிடை நீக்கமா? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் வேலையின்மை : இந்தியாவும் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் : ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவரின் கார் மீது, இருசக்கர வாகனம் மோதல் – போலீசார் விசாரணை!

தேனியில் கொல்லப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies