நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்கப்படுகிறது
Sep 12, 2026, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது வழங்கப்கப்படுகிறது

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று  லோக்மான்ய திலக் தேசிய விருது  வழங்கப்படுகிறது.

லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்பவர்களைக் கௌரவிக்கும் வகையில் 1983 ஆம் ஆண்டில் திலக் நினைவு மந்திர் அறக்கட்டளையால் இந்த விருது உருவாக்கப்பட்டது.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களுக்கு, அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு நாளில் வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறும் 41-வது நபர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார். டாக்டர் சங்கர் தயாள் சர்மா, பிரணாப் முகர்ஜி, அடல் பிகாரி வாஜ்பாய், இந்திரா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், என்.ஆர்.நாராயண மூர்த்தி, டாக்டர் இ. ஸ்ரீதரன் போன்ற பல்வேறு சிறந்த ஆளுமைகளுக்கு இந்த விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் தக்துஷேத் மந்திரில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்கிறார். காலை 11.45 மணிக்கு அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மதியம், 12:45 மணிக்கு, மெட்ரோ ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் பணிகள் முடிக்கப்பட்ட பிரிவுகளில் சேவைகளைத் தொடங்கி வைக்கும் வகையில் மெட்ரோ இரயில்களைப்  பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், பிரதமரின் வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் (பி.சி.எம்.சி.) கட்டப்பட்ட 1280 க்கும் மேற்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு  ஒப்படைக்கிறார்.

புனே மாநகராட்சியால் கட்டப்பட்ட 2650-க்கும் மேற்பட்ட பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகளையும் பயனாளிகளிடம் அவர் ஒப்படைக்கிறார். மேலும், பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் கட்டப்படவுள்ள சுமார் 1190 பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகளுக்கும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்படும் 6400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியால் (பி.சி.எம்.சி) அமைக்கப்பட்டுள்ள கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலையைப்  பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும்.

 

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை- பாஜகவுக்கு பெருகும் மக்கள் !ஆதரவு

Next Post

இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை- மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Related News

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies