என்.எஸ்.டி.சி. குழுவில் சுதா மூர்த்தி, ஷங்கர் மகாதேவன்!
Jul 29, 2026, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.எஸ்.டி.சி. குழுவில் சுதா மூர்த்தி, ஷங்கர் மகாதேவன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 15, 2023, 07:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட அறிக்கையில், 3 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இறுதி செய்ய உருவாக்கப்பட்ட என்எஸ்டிசி குழுவில் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி, பாடகர் ஷங்கர் மகாதேவன் மற்றும் பொருளாதார நிபுணரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

19 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு (என்எஸ்டிசி), தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தின் (என்ஐஇபிஏ) தலைவர் எம்.சி.பந்த் தலைமையில் செயல்படும். தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020 அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வழிநடத்தல் குழுவால் உருவாக்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புடன் (என்சிஎஃப்-எஸ்இ) பாடத்திட்டத்தை சீரமைக்க இந்த குழு இணைந்து செயல்படும் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

இதில் என்எஸ்டிசி-க்கு பள்ளி பாடத்திட்டம் மற்றும் 3 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்களை உருவாக்க அதிகாரம் அளிக்கப்படும். மேலும், என்எஸ்டிசியால் உருவாக்கப்பட்ட மற்றும் இறுதி செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கற்றல் பொருட்கள் என்சிஇஆர்டியால் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பள்ளி பாடப்புத்தகம் உருவாக்கும் குழுவில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியரான மஞ்சுல் பார்கவ் இணைத் தலைவராகவும், கணிதவியலாளர் சுஜாதா ராம்துரை, பேட்மிண்டன் வீரர் யு விமல் குமார், கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர் எம்.டி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

Tags: Sankar MahadevanSudha moorthiSchool Books
ShareTweetSendShare
Previous Post

திரெட்ஸுக்கு பதிலளித்த எக்ஸ் நிறுவனம்!

Next Post

திடீரென 15,000 அடி கீழே இறங்கிய விமானம்: பயணிகள் கடும் அதிர்ச்சி!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies