ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
Sep 9, 2026, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

Murugesan M by Murugesan M
Aug 16, 2023, 07:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டது. ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று, இராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தம் கடற்கரையில்  தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசையில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களைச் சென்றடைகிறது. அதன்படி  ஆடி அமாவாசையான இன்று மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் படித்துறையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர் தங்களது மூதாதையர்களின் பெயர்களைக் கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

மேலும் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், இன்று அதிகாலை முதலே கோவில் குளக்கரை மற்றும் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும் , திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்தனர். மூதாதையர்களின் பெயர்களைக்  கூறி வேத மந்திரங்களை ஓதினர். தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.

இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று பக்தர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.

கங்கை நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில்  அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  ஆடி அமாவாசையான  இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள். தென்காசி மாவட்டத்தில்,  குற்றாலத்தில், குற்றாலம் அருவி கரையில்  தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல இன்று தமிழகத்திலுள்ள கடற்கரை, குளம், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Tags: aadi ammavaasai
Share
Tweet
SendShare
Previous Post

குடும்பத்துடன் தேசியக்கொடி ஏற்றிய தீவிரவாதியின் சகோதரர்!

Next Post

குடியரசுத் தலைவர் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம்

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies