சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து, 'லேண்டர்' தனியாக பிரிப்பு- இஸ்ரோ.
Sep 30, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து, ‘லேண்டர்’ தனியாக பிரிப்பு- இஸ்ரோ.

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்திலிருந்து, ‘லேண்டர்’  இன்று பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம், ஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக.1-ம் தேதி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. 5 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 5-ம் தேதி நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் தற்போது வலம் வருகிறது.

அதன் பின்பு கடந்த 9, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் அடுத்தடுத்து சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தூரம் திட்டமிடப்பட்டபடிக்  குறைக்கப்பட்டு நிலவிற்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது.

Chandrayaan-3 Mission:

‘Thanks for the ride, mate! 👋’
said the Lander Module (LM).

LM is successfully separated from the Propulsion Module (PM)

LM is set to descend to a slightly lower orbit upon a deboosting planned for tomorrow around 1600 Hrs., IST.

Now, 🇮🇳 has3⃣ 🛰️🛰️🛰️… pic.twitter.com/rJKkPSr6Ct

— ISRO (@isro) August 17, 2023

நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டர் மற்றும் அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு குறைக்கப்பட்ட நிலையில் . லேண்டர் கேமரா மூலம் ஆகஸ்ட் 9ம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லேண்டரில் உள்ள கேமராவின் செயல்பாடு தொடர்பான சோதனையும் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த நிலையில் தான், இன்று சந்திரயான் 3 விண்கலத்தில் லேண்டர் இன்று பிற்பகல் 1:15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும் நாளை மாலை 4மணிக்கு சந்திரயான்- 3 சந்திரனுக்கு அருகில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Tags: ISROchandryan -3
Share
Tweet
SendShare
Previous Post

“இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது!”-உலகச் சுகாதார அமைப்பின் தலைவர்

Next Post

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்!-சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.

Related News

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies