‛‛இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை கொண்டுள்ளது”
என உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உலக சுகாதார அமைப்பின் சர்வர் தேச
பாரம்பரிய மருத்துவம் தொடர்பான மாநாட்டை துவக்கி வைத்த அவர்,
“யோகா உள்ளிட்டட் ஆயுர்வேதம் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின்
வளமான வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. இவை, வலியைக் குறைப்பதில்
பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் தொற்று அல்லாத நோய்கள்,மனநலம் உள்ளிட்டட் பல நோய்களுக்கு சிகிச்சை
அளிப்பதற்கு பாரம்பரிய மருத்துவத்தை பல நாடுகள் நாடிவருகின்றன. இந்த
மருத்துவமுறை மூலம், மனிதர்களின் நலனுக்கு போதுமான பங்களிப்பை
செய்துள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான மகத்தான
ஆற்றலை கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.